“என் நினைவாற்றல் நன்றாக உள்ளது” – பைடன்

280

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுமென்றே இரகசிய தகவல்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் தனிப்பட்ட காரியாலயத்தில் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசேட சட்டத்தரணிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அது இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், விசாரணையில், ஜனாதிபதி ஜோ பைடனின் நினைவு குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஜனாதிபதி பைடனின் நினைவாற்றல் குறைவாக இருப்பதாக விசாரணை அறிக்கை காட்டுகிறது.

அந்த அறிக்கையின்படி, அவர் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தையோ அல்லது அவரது மகன் பியூ பைடன் இறந்த ஆண்டையோ ஜனாதிபதியால் நினைவுகூர முடியவில்லை.

அதன்படி, நினைவாற்றல் குறைந்த முதியவர் என்பதால் ஜனாதிபதி பைடனை தண்டிக்க முடியாது என விசாரணை அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி பைடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையில், சிறப்பு செய்தி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க ஜனாதிபதி, தனது நினைவாற்றல் பற்றிய செய்திகளை மறுத்தார்.

அங்கு அவர், “எனது நினைவாற்றல் நன்றாக உள்ளது…” என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here