அவசர பொதுத் தேர்தல்! ஏப்ரலில் தீர்மானம்

1966

இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது ஏப்ரல் மாதம் தீர்மானிக்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நடத்தப்பட வேண்டும் எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்புகளின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு அரசாங்கத்தின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஜனாதிபதி தரப்பில் இருந்து ஏப்ரல் மாதம் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஏப்ரல் மாத இறுதியில் பொஹட்டுவ தனது ஆதரவு நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது. எனவே, பொஹட்டுவ ஜனாதிபதிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால், ஜனாதிபதிக்கு ஆதரவான பொஹட்டுவ மக்களை ஒன்று திரட்டி உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்வோம் என அரசாங்க சிரேஷ்டர்கள் குழுவொன்று ஆலோசனை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவும் குழு முன்மொழியும் என அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வது அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியின் நிலைப்பாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here