இன்று (12) முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்தார்.
அதன்படி இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் நீடிக்கலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.