ஆன்லைன் சட்டத்தின் ஒரு பகுதி ‘ரிவர்ஸ்’

389

பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, சட்டம் தொடர்பான 47 திருத்தங்கள் இன்று (12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

சட்டத்தின் 47 பிரிவுகளை மாற்றுவதற்காக இந்த திருத்தங்கள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களால் முன்வைக்கப்படுகின்றன.

இந்த திருத்தங்கள் இன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. பின்னர் வர்த்தமானியின் அறிவிக்கப்பட்டு, திருத்தப்பட்ட சட்டமூலம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல கட்சிகளிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here