follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1ஜனாதிபதி வேட்பாளர் சவாலை ஏற்க தயார்

ஜனாதிபதி வேட்பாளர் சவாலை ஏற்க தயார்

Published on

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், சவாலை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக ஒன்றிணைந்த நடவடிக்கையின் அடிப்படையில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதே நம்பிக்கை எனவும், பொதுவான உடன்படிக்கைகள் மூலம் அரசியல் கூட்டணியை பேணுவதே நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் கீழ் ஜனாதிபதித் தேர்தலும், வேட்பாளர் தெரிவும் இடம்பெறும் எனத் தெரிவித்த பாட்டளி சம்பிக்க ரணவக்க, நாட்டின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்று கூட்டாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் சவாலை ஏற்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

பொறுப்பு என்ன என்பது தமக்கு பொருந்தாது எனத் தெரிவித்த சம்பிக்க ரணவக்க, இம்முறையும் பொது நோக்கத்திற்காகவே தனது பங்களிப்பு என்றும் தெரிவித்தார்.

எந்தவொரு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளருக்கும் தனது ஆதரவு இருக்கும் என்றும், அதற்கு தகுதியாக நான் முன்மொழியப்பட்டால், சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் அத்தியாவசிய சேவைகளையும் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக...

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும்...

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் குறித்து சஜித் கேள்வி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக...