“இறந்த பிறகும் மக்களை வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல”

500

உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சனத் நிஷாந்த அவர்கள் இறக்கும் வரை அப்பகுதி மக்களின் மனங்களை வென்றவர் எனத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அரசியல்வாதிகளுக்கு இது மிகவும் கடினமான விடயம் எனவும் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இந்த இரங்கல் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here