எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தனது மகளுக்கு தடுப்பூசி போடச் சென்ற போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
வைத்தியர் ஒருவர் தனது மகளுக்கு தடுப்பூசியை பரிந்துரைத்ததாகவும், இது தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே பெறக்கூடிய தடுப்பூசி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி தேவைப்படுகின்ற போதிலும், அதிக விலை காரணமாக அரச வைத்தியசாலைகள் தடுப்பூசியை வழங்குவதில்லை என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்கும் அதே அக்கறையை அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.