ஜூலி சாங்கின் இடத்திற்கு கத்ரின் ஹோர்ஸ்ட்

209

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எலிசபெத் கத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்நாட்டின் மூத்த இராஜதந்திர அதிகாரியான ஹோர்ஸ்ட், அமெரிக்க வெளியுறவுத்துறையில் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான முதன்மை துணை உதவிச் செயலாளராகப் பணிபுரிகிறார். ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் தூதராகப் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் தற்போதைய அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கின் சேவை விரைவில் முடிவடைகிறது. அவர் பெப்ரவரி 2022 இல் நாட்டின் தூதராகப் பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here