follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபஸ் மேன் என்று கூறுபவர்கள் போலி செய்திகளை உருவாக்குகின்றனர்

பஸ் மேன் என்று கூறுபவர்கள் போலி செய்திகளை உருவாக்குகின்றனர்

Published on

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பதற்கு பல ஏற்பாடுகள் இருக்கின்றன. புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், சில பதவிகளை நியமிக்க ஜனாதிபதியிடம் காணப்பட்ட பிரத்தியேக அதிகாரத்தை மட்டுப்படுத்தி, தடைகள் மற்றும் சமன்பாடுகளை ஏற்படுத்த பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. அரசியலமைப்பு பேரவை நேற்று கூடிய போது பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான பெயரை ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார். பிரேரணைக்கு ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியதாகவும், இருவர் வாக்களிப்பை தவிர்த்தும் இருந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இங்கு சபாநாயகருக்கும் வாக்கு உண்டு. இது அறுதியிடும் வாக்கு மட்டுமே. 5 வாக்குகள் இருந்தால் மட்டுமே அது நிறைவேற்றப்படும் அல்லது நிராகரிக்கப்படும் மற்றும் வாக்குகளில் சமநிலை ஏற்பட்டால் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்க முடியும், ஆனால் நேற்று அவ்வாறு சமநிலை ஒன்று ஏற்பட்டிருக்கவில்லை. என்றாலும், சபாநாயகர் அறுதியிடும் வாக்கை வழங்கி தற்போதைய பொலிஸ்மா அதிபரின் பெயரை சட்டவிரோதமாக உறுதியளித்தார்.

அவ்வாறு எதுவும் நடக்கவில்லை, கூட்டம் முடிந்து உறுப்பினர்கள் வெளியேறிய நேரத்தில் கூட, அவ்வாறானதொரு பெயர் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர் சபாநாயகர் பெயரை உறுதி செய்துள்ளார், இது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தான் பொய் கூறுவதாக இருந்தால் தம் மீது வழக்கு தொடரலாம். சபாநாயகர் இங்கு அரசியலமைப்பை மீறியுள்ளார். இந்நாட்டில் சட்டம் சட்டவிரோதமாகிவிட்டது. உயர் நீதிமன்றம் வழங்கிய எந்தத் திருத்த பரிந்துரைகளையும் உள்வாங்காது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கூட சபாநாயகர் கையெழுத்திட்டார். சபாநாயகர் இரண்டு தடவைகள் அப்பட்டமாக அரசியலமைப்பை மீறியுள்ளார், நாட்டில் இன்று காட்டுச் சட்டமே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ்,81 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் மாத்தளை, ரத்தோட்டை கைகாவல மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய (27) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பிரபஞ்சம் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டாத ஒரு குழுவினர் பொறாமைத்தனமாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தம்புத்தேகம தேசிய பாடசாலைக்கு பஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியதன் பின்னர் தம்மை பஸ் மேன் என்று அழைத்ததாகவும், ஆனால் அவ்வாறு அழைப்பதைக் கொண்டு தாம் சலைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தம்புத்தேகம பாடசாலைக்கு தாம் வழங்கிய பஸ் பழுதடைந்துள்ளதாக அண்மைய நாள் பத்திரிகை ஒன்றின் ஊடாக போலியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ஆராய்ந்த போது அது பொய்யான கதை எனவும், திருகோணமலையில் நடைபெற்ற சாரணர் ஜம்போரிக்கு கூட அந்த பாடசாலையின் பிள்ளைகள் இதே பஸ்ஸிலயே சென்றுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...