நாவுலவில் மணல் ஈ : கவனமாக இருக்க அறிவுரை

973

நாவுல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல கிராம சேவை களங்களில் மணல் ஈ கடியால் லீஷ்மேனியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவுல பொது சுகாதார பரிசோதகர் தெரிவிக்கின்றார்.

மாத்தளை மற்றும் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலைகளில் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை ஆராய்ந்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.

நாவுல – நாலந்த, உடுதெனிய, நாவுல நகரப் பகுதி மற்றும் செனகம கிராமத்தைச் சேர்ந்த மக்கள் லீஷ்மேனியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் நாவுல பொதுச் சுகாதார பரிசோதகர் வைத்தியர் விஜித ஏகநாயக்க, இது தொடர்பில் விசாரனையில் தெரிவிக்கையில், தோலில் வலியற்ற காயங்களை கணக்கில் கொள்ளாமை போன்ற காரணங்களினால் பல நோயாளர்களுக்கு இந்த நோயினால் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் தமது வீட்டைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும், சுகயீன நிலையைக் கண்டால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலமும், சுற்றுப்புறச் சூழல் தொடர்பில் அவதானமாக இருப்பதன் மூலமும் இந்த நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் வைத்தியர் விஜித ஏக்கநாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here