ஜனாதிபதி தேர்தலை வழிநடத்த குழு நியமனம்

478

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நிமல் லான்சா, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் கூட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை முதன்முறையாக கூடிய அரசியல் அமைச்சரவையில், எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here