கால்நடைகளுக்குள் பரவி வரும் கொடிய தொற்றுநோய்

1232

கிளிநொச்சி, தர்மபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கால்நடைகளுக்கு பரவி வரும் பசு வைரஸ் நோய் காரணமாக நேற்று (03) வரை பல மாடுகள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி எஸ். நிரஞ்சன் கூறுகையில், நோய் அறிகுறி குறைந்துள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறதாகவும், குறித்த தொற்றுநோய் ஆரம்பத்தில் இருக்கும் போது பசுக்கள் உணவு உண்பதை நிறுத்துவதாகவும், இருந்த இடத்தை விட்டும் வெளியேறத் தயங்குவதாகவும் அப்படியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாடுகளின் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் ஏற்படும் என்றும் வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நோய் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தென்படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு நோயை குணப்படுத்த முடியாது என தர்மபுரத்தில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த வருடம் இப்பிரதேசங்களில் கால்நடைகளை தாக்கிய இந்த தொற்று நோய் காரணமாக 400க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here