மாலிங்கவிடமிருந்து மதீஷவிற்கு பாடம்

820

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 03 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நிலையில் நேற்று (05) இரவு நிறைவடைந்தது.

பங்களாதேஷ் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் தசுன் ஷானக இலங்கை அணிக்கு வரலாறு காணாத வெற்றியை பெற்று தந்தது தொடர்பில் பலரது கவனமும் குவிந்துள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு பங்களாதேஷ் அணிக்கு கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் என்ற இலக்கு இருந்தது, அந்த ஓவரில் தசுன் ஷானக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 08 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார்.

இதற்கிடையில், இந்த போட்டியில், மதீஷ பத்திரனவின் பந்துவீச்சு ரிதம் எவ்வாறு இழந்தது என்பது பார்க்கப்பட்டது.

அதன் காரணமாக அவர் தனது 04 ஓவர்களை ஒரு விக்கெட்டை வீழ்த்தி 54 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கி முடித்தார்.

மதீஷ தனது 04 ஓவர்களில் 03 பந்துகளையும் 09 வைட் பந்துகளையும் வீசியதோடு 12 மேலதிக பந்துகளையும் வீசினார்.

இதேவேளை, இலங்கையின் அதிவேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க போட்டியின் பின்னர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் விசேட பதிவொன்றை பதிவு செய்திருந்தார்.

கடைசி ஓவரில் தசுன் ஷானக அபாரமாக வீசிய பந்தினால் வெற்றியை இலங்கை பெற்றதாக அவர் அந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரவிருக்கும் சவால்களுக்கு சிறப்பாக தயாராகி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இளம் மதீஷவிற்கு இவை மதிப்புமிக்க பாடங்கள் என்று மலிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here