ரிஷாத்தின் தீர்ப்புக்கு எதிராக அலி சப்ரி ரஹீம் வெற்றி

944

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி துபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்கத்துடன் அலி ஷப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடமானது ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் அவரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் கட்சி உயர்பீடமானது தன்னிச்சையாக முடிவெடுக்காது சுயாதீன குழுவொன்றினை நிறுவியே இது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதை தடுக்கவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here