ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 02 இலங்கையர்களும் மீட்பு

270

தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த காயமடைந்தவர்கள் உட்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாகவும் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையினரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்த இலங்கையர் பற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. கப்பலில் வேறு இலங்கையர்கள் யாராவது இருந்தார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

INS கொல்கத்தா கப்பல், ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் அந்த குழுவினர் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here