விரைவில் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான சட்டம்

147

சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பு சங்கரீலா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாம் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பிலான சங்கங்களை உருவாக்க உள்ளோம். AI தொடர்பிலான சட்டத்தையும் கொண்டுரவுள்ளோம். செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான ஆய்வுகளுக்காகவும் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாம் கல்வி கற்ற காலத்தில் அரச பாடசாலைகள், தனியார் மற்றும் உதவிகளைப் பெற்று இயங்கும் பாடசாலைகள் என பல பிரிவுகள் இருந்தன. துரதிஷ்டவசமாக நீங்கள் அனைவரும் அரசாங்க பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் என இரு பிரிவுகளுக்குள் மாத்திரம் சிக்கிக்கொண்டுள்ளீர்கள். அதனால் கல்வி முறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

அதேபோல் நாட்டிற்கு சேவையாற்றிய பாடசாலைகளுக்கு உதவி செய்யும் திட்டமொன்றை முன்மொழியவும் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here