தரக்குறைவான மருந்துகளில் 98% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

425

அவசரகால கொள்வனவுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகள் பாவனைக்கு பொருத்தமற்றவை என கண்டறியப்பட்ட போதும், அந்த மருந்துகளில் 98% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக
மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது

கணக்காய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, சில மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னர் தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகள் வழங்கப்பட்டதாகக் அதன் தலைவர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டார்.

இதற்கிடையில், காலாவதியாகவுள்ள மருந்துகளை விரைவில் பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here