follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்பலஸ்தீன பிரதமராக முகமது முஸ்தபா நியமனம்

பலஸ்தீன பிரதமராக முகமது முஸ்தபா நியமனம்

Published on

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் (West Bank) பலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில் இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்.

முகமது முஸ்தபா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பலஸ்தீன விடுதலை அமைப்பின் சுதந்திர செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

பொருளாதார விவகாரத்திற்கான துணை பிரதமராக பணியாற்றியுள்ளார். பலஸ்தீன முதலீடு நிதி குழுவில் பணியாற்றியுள்ளார். உலக வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

குவைத் அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இறையாண்மை சொத்து நிதி, பொது முதலீட்டு நிதி ஆகியற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காஸாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.

பலஸ்தீனத்தின் பிரதமராக இருந்த முகமது இப்ராஹிம் ஷ்டய்யே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...