வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக் வலயங்களை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெசாக் வலயங்கள் செயற்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.