4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
தனி விமானம் மூலம் ரியாத் வந்த ட்ரம்பை சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
சவுதி பயணத்தை நிறைவு செய்தப்பின் டிரம்ப் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.