முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேருக்கு நெருக்கடி

444

முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேர் தமது பதவிக்காலத்தில் ஈட்டிய சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்தி இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலஞ்சம் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தேசிய இயக்கம் சிவில் அமைப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர்கள் ஏ. எச். எம்.பௌசி, நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, மைத்திரிபால சிறிசேன, பவித்ரா வன்னியாராச்சி, சன்ன ஜயசுமன, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் வரவுகளை முழுமையாக கணக்காய்வு செய்யுமாறு கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here