follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

Published on

பாடசாலைகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தப்படும் நீண்ட தூர ஓட்டப் போட்டி மற்றும் மரதன் போட்டிகளுக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த புதிய சுற்றறிக்கையை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மரதன் மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும் என குறித்த சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரதன் ஓட்டப் போட்டிகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க மருத்துவ அறிக்கை மற்றும் ஈசிஜி (ECG) அறிக்கையை வைத்தியரிடம் வழங்க வேண்டும்.

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக அண்மையில் பதிவான விளையாட்டு வீரர்களின் மரணங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...