தற்போது வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’ – சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

1087

நாட்டில் தற்போது டினியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நோயின் பிரதான அறிகுறி அரிப்பு ஏற்படுவதுடன், சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறி காணப்படும்.

அதிகளவில் தோல் சுருங்கும் இடங்களிலும் வியர்வை அதிகளவில் சேரும் இடங்களிலும் அதிகளவில் இது ஏற்படும். அக்குள், பாதங்கள் மற்றும் தலையிலும் இத்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

சருமத்தை தூய்மையாக வைத்திருத்தல், மற்றவர்களின் ஆடைகளை பயன்படுத்தாமல் இருத்தல், தளர்ந்த ஆடைகளை பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் இந்த சரும நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோயை சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here