கிரிஸ்டல் சிம்பனி சொகுசு கப்பல் கொழும்பில்

141

கிரிஸ்டல் சிம்பனி என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் சீனா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 186 பயணிகளும் 429 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள், கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு ரக கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து வருகை தந்த இந்த கப்பல் 846 பயணிகள் மற்றும் 469 பணியாளர்களுடன் வருகைத்தந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here