எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.