‘ஈஸ்டர் படுகொலை’ – பிள்ளையானால் நூல் வெளியீடு

115

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் அரச அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

‘ஈஸ்டர் படுகொலை’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் (23) மட்டக்களப்பு காஞ்சனா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவில், விருந்தினர்கள் கூறுகையில், மார்ச் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளிவரும்.

எவ்வாறாயினும், இந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் இருப்பதாக அவரது சொந்தக் கட்சியின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா சில மாதங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here