ஹமாஸ் தலைவர் ஈரானுக்கு

263

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி இன்று (26) ஈரான் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கிய பின்னர் ஹமாஸ் தலைவர் ஈரான் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

ஹமாஸின் முக்கிய ஆதரவாளராக ஈரான் உள்ளது.

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் ஹமாஸ் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here