இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பாலத்தில் மோதியது

183

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இலங்கை நோக்கிச் சென்ற கப்பலே அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Dali என்ற சரக்கு கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து வீழ்ந்ததில் விபத்தினால் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், மீட்புக் குழுக்கள் காணாமல் போனோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here