follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபொஹொட்டுவவிற்கு 05 ஜனாதிபதி வேட்பாளர்கள்

பொஹொட்டுவவிற்கு 05 ஜனாதிபதி வேட்பாளர்கள்

Published on

பொதுஜன பெரமுனவில் தற்போது வரையில் நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒரு பிரதேச சபைக்கு கூட வேட்பாளர்களை காண முடியாது என்று கூறிய கட்சி இன்று பல ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும்
பொது வேட்பாளரை முன்வைக்க தாம் தயாராக இருப்பதாகவும் அந்த வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கதை இவ்வாறு இருக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடக சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கையில்;
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக பதவியேற்க இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் பொது மக்களின் கருத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எவரும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...