இலங்கைப் பூக்கள் நெதர்லாந்துக்கு

142

சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாயப் பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால், அந்த சந்தையை கைப்பற்றுவதில் இலங்கை அரசாங்கமும் வர்த்தகர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் HE Bonnie Horbach தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான ஆதரவை வழங்க முடியும் என தெரிவித்த தூதுவர், நெதர்லாந்துக்கு இடையிலான தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நெதர்லாந்து தூதரகத்தின் விவசாய அம்சங்கள் குறித்து தூதுவர் மற்றும் ஆலோசகர் மிச்சியல் வான் எர்கல் மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

தற்போது நெதர்லாந்து பயன்படுத்தும் புதிய விவசாய தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.

கென்யாவில் இருந்து நெதர்லாந்துக்கு அலங்கார மலர்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க முடியும் என்றும் தூதுவர் தெரிவித்தார். இலங்கை மலர் பயிர்ச்செய்கைக்கு சிறந்த வாய்ப்புள்ள நாடாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பூக்கள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து தூதுவர் வருத்தம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here