follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஎங்களுக்கு உலகளாவிய பொறுப்பு உள்ளது - இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

எங்களுக்கு உலகளாவிய பொறுப்பு உள்ளது – இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

Published on

நாட்டிற்குள் இயற்கை மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு முகங்கொடுக்க சரியான திட்டத்தை வைத்திருப்பது மிகவும் அவசியமானது. அத்துடன் இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் பிற நாடுகளுக்கு உதவுவதற்கான திறனை நாம் உருவாக்குவது அவசியமாகும்.

மத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் விசேட திறன்கள் மற்றும் தயார்நிலைகளை அவதானிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) மத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணிக்கு விஜயம் செய்தார்.

மத்தேகொடவில் உள்ள இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணிக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை, இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியும், இலங்கை பொறியியலாளர் படையணியின் கேர்ணல் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்தன வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இராணுவ உபகரணங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிகுண்டுகளை அகற்றுதல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் திறன்கள் மற்றும் இராணுவப் பொறியாளர்களின் செயல்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கக்காட்சியும் இதன்போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள இரசாயன, உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிபொருட்கள் அகற்றல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் முகாமைத்துவ கருவி மற்றும் உபகரணங்களை அமைச்சர் தென்னகோன் பார்வையிட்டதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய செயல்விளக்கம்களையும் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...