நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த 53 மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் அவற்றில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
கைதான பெண்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டடுள்ளனர்.
அதன்போது அவர்களில் இருவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.