கராபிட்டிய வைத்தியசாலைக்கு 200 கோடி ரூபா ஒதுக்கீடு

99

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கராபிட்டிய வைத்தியசாலைக்கு 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, பேராசிரியர் பிரிவு, பக்கவாதப் பிரிவு ஆகியவற்றுக்கு 100 கோடி ரூபாவும், மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் நூறு கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் அளவின் அடிப்படையில் கராபிட்டிய வைத்தியசாலையானது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்றைய தினம் மகப்பேற்று வைத்தியசாலையுடன் கராபிட்டிய வைத்தியசாலையின் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படுகிறன என்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here