டிசம்பர் வரை முட்டை விலை அதிகரிக்கப்படாது

386

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.

முட்டையின் விலை 35 ரூபாவாக குறைந்தால் சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அரசாங்கம் அதிகமான கோழிகளை இறக்குமதி செய்துள்ளது. இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முட்டைகளினதும் கோழிக் குஞ்சுகளினதும் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here