இடிந்து விழுந்த பாலத்திற்கான காப்பீட்டு இழப்பீடு $3 பில்லியனைத் தாண்டியது

632

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, குப்பைகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டது.

நாட்டின் பரபரப்பான துறைமுகத்தில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்கு மத்தியில் மூழ்கும் அபாயம் உள்ளதால் நான்கு தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டாலர் மத்திய அரசின் அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டு இழப்பீடு 3 பில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here