மனித பாவனைக்கு தகுதியற்ற பாண்தூள் மூட்டைகள் கண்டுபிடிப்பு

181

கனேவல்பொல பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 15 கோடி பெறுமதியான பாண் தூள் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிரவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பாண் தூள் பொதிகள் சந்தையில் வெளியிட தயாராக இருந்ததாகவும் மிகப் பெரிய கிடங்கில் இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், 25 மற்றும் 50 கிலோ எடையுள்ள 10,000க்கும் மேற்பட்ட பாண் தூள் மூட்டைகளில் இருந்ததாகவும் சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here