follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் யார்?

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இந்த தாக்குதல் தொடர்பான மலல்கொட குழு அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு அறிக்கை என்பனவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவோ அல்லது அவற்றைப் பரிசீலனை செய்யவோ அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பான அறிக்கையின் சில பகுதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட மறைக்கப்பட்டுள்ளன. போதிய ஆதாரம் இன்றி, தெரிவு செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்களின் பெயர்களை கூறி பல்வேறு நபர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விசாரணையின் விஸ்தீரனம் மற்றும் இது தொடர்பாக விடுக்கப்பட்ட பரிந்துரைகள், இந்த பரிந்துரைகளை அமுல்படுத்தாததற்கான காரணங்கள், இந்த விசாரணை அறிக்கைகள் பொதுமக்களுக்கு கிடைக்காததற்கான காரணங்கள், தற்போதைய ஜனாதிபதி 18.7.2022 அன்று கூறியது போன்று இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தெரிவித்த இந்த விசாரணை தொடர்பான தகவல்களை அறிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று இது சில எம்.பி.க்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்களுக்கும் இது நகைச்சுவையாக அமையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நகைச்சுவைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் உயிரத்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று(01) பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுடன் புலனாய்வுத் துறையினருக்குள்ள தொடர்பு குறித்த விடயங்களை அறிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி தெளிவான அறிவிப்பு மூலம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய குற்றத்திற்கு காரணமான நபர்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தாததற்கான காரணங்களை அறிய விரும்புவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு இன்றைய தினமே பதில் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...