தேங்காய் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடம்

340

உலகில் தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தென்னைச் செய்கை சபை ஸ்தாபிக்கப்பட்டு 52 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மடமுலன தென்னிலங்கை தெங்கு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேங்காய் நுகர்வுக்கான பாவனையில் ஏற்படும் விரயத்தை குறைப்பது தொடர்பான புதிய தொழில்நுட்ப அறிவை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்துடன் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here