துருக்கி தேர்தல் – ஜனாதிபதி எர்துவானுக்குப் பின்னடைவு

87

துருக்கி உள்ளூர் தேர்தலில் பிரதான நகரங்களான இஸ்தான்பூல் மற்றும் அங்காராவில் பிரதான எதிர்க்கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது.

இந்த முடிவு மூன்றாவது தவணைக்காக வெற்றியீட்டி ஓர் ஆண்டுக்குள் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் சந்தித்த பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தனது அரசியல் வாழ்வை மேயராக ஆரம்பித்த இஸ்தான்பூலில் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் எர்துவானில் கட்சி நாடு தழுவிய ரீதியில் தேர்தல் ஒன்றில் தோற்பது இது முதல் முறையாகும்.

தலைநகர் அங்காராவில் எதிர்க்கட்சி மேயர் மன்சூர் யாவாஸ் தனது போட்டியாளரை விடவும் 60 வீத வாக்குகளால் முன்னிலை பெற்ற சூழலில் பாதிக்கும் குறைவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வெற்றியை அறிவித்துள்ளார். இஸ்மிர் மற்றும் பர்சா என பல பிரதான நகரங்களிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமது ஆதரவாளர்கள் முன் பேசிய எர்துவான், ‘தவறுகளை சரி செய்வோம் என்பதோடு குறைகளை நிவர்த்தி செய்வோம்’ என்றார்.

துருக்கியில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2028 ஆம் ஆண்டிலேயே நடைபெறவுள்ள நிலையில் 70 வயதான எர்துவான் மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here