மைத்திரியிடம் இருந்து நீதிமன்றத்திற்கு விசேட அறிவிப்பு

717

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து இதனை அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கிய கருத்து தொடர்பில் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here