சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வழங்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே இந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
“நாட்டில் பணப்பரிவர்த்தனை பிரச்சினையால் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். ஆனால் சுற்றுலாத்துறையில் 6 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்களை பயன்படுத்துவதில்லை. இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன. 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்களை கொண்டு வாருங்கள்.1000 வாகனங்கள் மட்டுமே கொண்டு வரப்படும்.”