follow the truth

follow the truth

May, 22, 2024
HomeTOP1எலோன் மஸ்க் இந்தியாவுக்கு

எலோன் மஸ்க் இந்தியாவுக்கு

Published on

உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக ‘எக்ஸ்’ செய்தியில் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவரது விஜயம் குறித்த திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் முதலீடு செய்வது தொடர்பான உடன்பாட்டை எட்டுவதே அவரது வருகையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் இந்தியா மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை கணிசமாக குறைத்தது.

500 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உள்நாட்டில் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்கக்கூடிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் அந்த வாய்ப்பின் கீழ் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.

டெஸ்லாவின் தலைவரான மஸ்க், 2021 ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் வெளியிடுவது அதிக இறக்குமதி வரிகளால் தடைபட்டதாகக் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் சேவையில் பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த...

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...