follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுIPL 2024 - 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

IPL 2024 – 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பாட்டத்தினை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ஓட்டங்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ஓட்டங்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல துவக்கம் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ஓட்டங்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள...