follow the truth

follow the truth

July, 5, 2025
Homeவிளையாட்டுஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய நேபாள வீரர்

ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய நேபாள வீரர்

Published on

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கிண்ணத்திற்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கட்டார் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ந்து சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), வெஸ்ட்இண்டீசின் பொல்லார்டு (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...