சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணவில்லை

220

சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டத்தை நடத்தி திருடர்களை நீதிமன்றில் நிறுத்தியது. மருந்து பொருள் மோசடி குறித்து பலர் பேசினாலும், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்தான நாட்டில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள், திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும், இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here