follow the truth

follow the truth

December, 3, 2024
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளை அசௌகரியப்படுத்தும் ஊதுபத்தி விற்பனையாளர்கள்

சுற்றுலா பயணிகளை அசௌகரியப்படுத்தும் ஊதுபத்தி விற்பனையாளர்கள்

Published on

நுவரெலியா நகரில் ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டு தொடர்ந்து காணப்படுகின்றது.

இவர்கள் ஒரு குழுவாகவே வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து குறித்த பெண்கள் கைக்குழந்தையுடன் அமர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தினமும் பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிகமானவர்கள் கர்ப்பிணிப் பெண்களாகவும், பாலூட்டும் தாய்மார்களாகவும் உள்ளனர். இதில் சிறுமிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இனி வரும் காலங்களில் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம்...

நிஹால் தல்துவ பதவியில் இருந்து நீக்கம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி,...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை

மாதாந்த சமையல் எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம் டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என...