கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

830

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இன்று பிற்பகல் கொழும்பில் பல வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை இன்னு(24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியின் இருபுறமும் வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் அதிவேக வீதியில் இருந்து பேலியகொட, ஒருகுடவத்த சந்தி, தெமட்டகொட, பொரளை, டி.எஸ்.சேனநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், ஹோர்டன் சுற்றுவட்டம், கிரீன் பாத், நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்ஏ டி மெல் மாவத்தை, சாந்த மைக்கல் வீதி, காலி வீதி இருந்து கோட்டை வரையிலான வீதி, ஹில்டன் ஹோட்டல் வரையான வீதி ஆகிய மூடப்படவுள்ளன.

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் மூடப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து காலி வீதி உட்பட பல வீதிகள் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மூடப்படும்.

மீண்டும் இரவு 7.30 மணிக்குப் பின்னர் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதை மூடப்படவுள்ளதுடன் இரவு 9.30 மணிக்குப் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து NSA சுற்றுவட்ட காலி வீதி உட்பட பல வீதிகள் மூடப்படும்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இரவு 9.30 முதல் இரவு 10.30 வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், இன்று காலை 9.30 முதல் 11 மணி வரை மத்தள முதல் உமா ஓயா வரையான வீதி சில நேரம் மூடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மீண்டும் வீதி மூடப்பட்டு மத்தள விமான நிலையத்தைச் சுற்றி விசேட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here