ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

1071

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது 3 நாள் பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (24) இலங்கை சென்றதை அடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது, ​​பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு வந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதே அவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here