“எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டால் விமான நிலையத்தில் வரிசை இருக்காது”

253

வெளிநாட்டினருக்கு அறவிடப்படும் வீசா கட்டண அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதகங்கள் குறித்து தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக பக்கம் மாறிய ஒரு குழு தனது பிரேரணையை விமர்சித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அப்போது தான் கூறியதை செவிமடுத்திருந்தால் அண்மையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தொம்பே தங்காலை தர்மராஜ வித்தியாலயத்திற்கு சிநேகபூர்வ வகுப்பறையை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here