follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉலகம்உக்ரைன் ஜனாதிபதியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷ்யா

உக்ரைன் ஜனாதிபதியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷ்யா

Published on

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா படையெடுத்தது. எனினும், இது ஒரு இராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா கூறியது. உக்ரைனின் கீவ், டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா தொடக்கத்தில் கைப்பற்றியது. ஆனால் அவற்றை உக்ரைன் பின்னர் மீட்டது.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளது. அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷ்யா வைத்துள்ளது.

இதுபற்றி ரஷ்யாவில் இருந்து வெளிவரும் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யா உள்துறை அமைச்சின் தகவலின்படி, ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்ளார். ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் பலர் மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஷ்யா பிடியானைகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி, எஸ்தோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா நாட்டின் கலாசார அமைச்சர் மற்றும் லத்விய நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷ்யா பொலிசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்தனர். சோவியத் நாடாக இருந்த காலத்தில் இருந்த நினைவு சின்னங்களை அவர்கள் அழித்து விட்டனர் என கூறி இந்த பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மீதும் கடந்த ஆண்டில் ரஷ்யா கைது பிடியாணைகளை பிறப்பித்தது. எனினும், இந்த தகவலை உக்ரைன் நிராகரித்துள்ளது.

இதுபற்றி உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புதினுக்கு எதிராக போர் குற்றங்களை புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதற்கான பிடியாணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது 123 நாடுகளில் அமுல்படுத்தப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுமிகள் வழக்கில் டிரம்ப் தொடர்பு? – எலான் மஸ்க் கிளப்பிய பெரும் சர்ச்சை

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்...